திருக்கடையூரில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான நிவேதா முருகன் பங்கேற்றார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் மத்திய ஒன்றியம் திருக்கடையூரில் தனியார் திருமண மண்டபத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது திமுக ஒன்றிய அவை தலைவர் கோபால் தலைமையில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் பல்வேறு கருத்துக்கள் அறிவுரைகள் வழங்கினார்.
இதில் திமுக செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக் தகவல் தொழில்நுட்ப அணி தஞ்சை மண்டல பொறுப்பாளர் ஸ்ரீதர் மற்றும் திமுக நிர்வாகிகள் கிளை கழக நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் ஊராட்சி பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த மாற்று கட்சியினர் பலர் திமுகவில் இணைந்தனர் அவர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது விழா ஏற்பாடுகளை திமுக செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயகுமார் சிறப்பாக செய்திருந்தார்.
No comments