Breaking News

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் குங்கிலியக் கலய நாயனார் குருபூஜை விழா.


திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் குங்கிலியக் கலய நாயனார் குருபூஜை விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்விக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்குப்பின் ஆலய பிரகாரங்களில் குங்கிலியக் கலய நாயனார் சுவாமி வலம் வந்து மகாதீபாரதனை நடைபெற்றது:- 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் மிகவும் பழமை வாய்ந்த உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் பக்தர் மார்க்கண்டேயனுக்காக இறைவன் காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி  எமதர்மனை காலால் எட்டி உதைத்து வதம் செய்து எமதர்மனை மீண்டும் உயிர்பித்த தலம். பல்வேறு சிறப்புகளை உடைய இத்தளத்தில்  63 நாயன்மார்களில் ஒருவரான குங்கிலியக் கலய நாயனார் தன் வாழ்க்கை வசதிகள் குறைந்த போதிலும் திருக்கோயிலுக்கு குங்கிலியத் தூபமிடும் திருத்தொண்டினை பக்தி சிறத்தையுடன் விடாது செய்து வந்தார். 

பசியின் கொடுமை தாங்காமல் தாலியை கழற்றி கொடுத்து மனைவி நெல்  வாங்கி வர சொன்ன நிலையிலும் குங்கிலிய பொதியை வாங்கி வந்து கோயிலில் சேர்த்த குங்கிலியக் கலய நாயனாரின் தொண்டை  போற்றி சிவபெருமான் பொன்னும் பொருளும் கிடைக்க அருளசெய்தார். பல்வேறு சிவதொண்டு புரிந்து முக்தியடைந்த குங்கிலியக் கலய நாயனாரின் குருபூஜைவிழா ஆலயத்தில் நடைபெற்றது. 

நாயனாருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 40 ஆண்டுகளுக்குப்பிறகு குங்கிலியக் கலய நாயனார் சுவாமி கோயில் உட்பிரகார சன்னதி வெளிப்புற சன்னதிகளில் வலம் வந்து மகாதீபாரதனை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

No comments

Copying is disabled on this page!