திண்டிவனம் நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம், அமைச்சர் செஞ்சி.மஸ்தான் பங்கேற்பு.
அப்போது பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், திமுக முப்பெரும் விழாவில் நகர கழகத்தின் சார்பில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். என்றும் ஒவ்வொரு தொகுதியிலும் முப்பெரும் விழா பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்றும் கிளை கழகங்கள் எங்கும் திமுக கொடி ஏற்றி முப்பெரும் விழாவை கொண்டாட வேண்டும்., என்று கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வரின் உன்னதமான திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும்., அதற்காக முதல்வரின் திட்டங்களை மக்களிடையே எடுத்து கூறி,கழகப் பணியாற்றினாலே போதும் 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெறி பெரும் என கூறினார்.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாசிலாமணி, சேதுநாதன் சீத்தாபதி சொக்கலிங்கம், மாவட்ட கழக பொருளாளர் ரமணன், மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிராஜ், பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன், நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன்,ஒன்றிய செயலாளர்கள் சொக்கலிங்கம், தயாளன், பழனி, ரவிச்சந்திரன்,முன்னாள் மாவட்டத் துணைச் செயலாளர் அசோகன், முன்னாள் நகர செயலாளர் கபிலன்,நகர துணைச் செயலாளர்கள் கௌதமன்,ரேணுகா அண்ணாமலை, மாவட்ட பிரதிநிதிகள் ராஜசக்தி, முருகன், சின்னதுரை இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரமேஷ், பாபு ,மாவட்ட அமைப்பாளர்கள் கோபிநாத், சந்திரன் ,ராஜா, காதர் நவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் இதில் அணி தலைவர்கள் பிர்லா செல்வம்,அசோக் குமார்,துணை தலைவர்கள் பிரகாஷ், சையத் கவுஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
No comments