வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தூத்துக்குடி மாநகராட்சி தயாராக உள்ளது; மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி.
அப்போது, மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தூத்துக்குடி மாநகரில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெய்த வரலாறு காணாத கனமழையினால் மாநகராட்சி பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. அப்போது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து பார்வையிட்டு இனிவரும் காலங்களில் அந்தந்த பகுதிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் மழைநீரை வெளியேறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
அந்த வகையில் கடந்த முறை அதிகளவில் பாதிக்கப்பட்ட குறிஞ்சிநகர், முத்தம்மாள்காலணி, ரஹமத்நகர், ராம்நகர், கலைஞர்நகர், கங்காபரமேஸ்வரி காலணி, திரேஸ்புரம் உள்ளிட் பகுதிகளில் புதிதாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கயத்தாறு, ஒட்டப்பிடாரம், கோரம்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாநகருக்குள் புகும் மழைவெள்ளநீரை கடலுக்கு திருப்பி விடுவதற்காக புதிய மழைநீர் கால்வாய்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கு மின்மோட்டார்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில், துணை ஆணையர் ராஜாராம், துணை பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் முனீர் அகமது, உதவி ஆணையர்கள் சுரேஷ்குமார், சொர்ணலதா, கல்யாண சுந்தரம், தெற்கு மண்டல அலுவலக மேற்பார்வையாளர் குருவையா, நகர்நல அலுவலர் வினோத்ராஜா, இளநிலை பொறியாளர்கள் செல்வம், பாண்டி, சேகர், சுகாதார ஆய்வாளர்கள் ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜபாண்டி, ராஜசேகர், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
No comments