சீர்காழியில் ரத்தத்தால் உருவான திருவள்ளுவர் படம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டைநாதபுரத்தை சேர்ந்தவர் 26 வயதான இளைஞர் அரவிந்த். இவர் சிறு வயது முதலே ஓவியத்தின் மீது அதிக பற்று கொண்டவர். அதன் காரணமாக ஏராளமான ஓவியங்களை வரைந்து உள்ளார். குறிப்பாக சாக்பீஸில் நுண்சிற்பங்களே வடிவமைப்பதை கைதேர்ந்தவர் ஆவர். மேலும் விஜயகாந்தின் மீது தீவிர பற்று கொண்டவர் ஆவார்.
அதன் காரணமாக தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உயிரிழந்ததை அடுத்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தனது ரத்தத்தினை சிறிய பாட்டிலில் எடுத்து, அதன் மூலம் விஜயகாந்தின் உருவத்தை வரைந்து, மறைந்த விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்நிலையில் மீண்டும் தனது ரத்ததினை பயன்படுத்தி தெய்வப்புலவர் திருவள்ளுவரை வரைத்துள்ளார் அரவிந்த். அதற்காக தனது உடலில் இருந்து 3 மில்லி இரத்தத்தினை வெளியில் எடுத்த அரவிந்த், அதனை கொண்டு தனது கைவிரல் ரேகை பதிப்பாக 1330 முறை கைரேகை பதிவு செய்து திருவள்ளுவரை வரைந்துள்ளார். இது தற்போது அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது. மேலும் அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியர் பணி வழங்கினால் அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களை ஊக்கப்டுத்தி ஓவிய திறமையை வெளிபடுத்த உதவி செய்வேன் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments