புதுவை அருங்காட்சியகம் சார்பில் இளைஞர் விடுதியில் நடைபெற்ற திருக்குறள் முற்றோதல் நிகழ்வு.
புதுவை அருங்காட்சியகம் சார்பில் இளைஞர் விடுதியில் நடைபெற்ற திருக்குறள் முற்றோதல் நிகழ்வில் கன்னியாகுமரியில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி தூய வளனார் மேல்நிலைப் பள்ளியிலிருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த மாணவ மாணவியர்களுக்கு திருக்குறள் முற்றோதல் - என்ற நிகழ்வு புதுவை அருங்காட்சியகத்தால் முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து மூன்றாவது முறையாக நடைபெறும் இந்நிகழ்வில் இவ்வாண்டு 10 ஆசிரியர்கள் 129 மாணவ மாணவியர் புதுச்சேரிக்கு சுற்றுலா மேற்கொண்டனர்.
புதுச்சேரியில் பல இடங்களை பார்வையிட்ட வர்களுக்கு புதுச்சேரியின் நினைவுச் சின்னமான ஆயி மண்டபத்தை பற்றியும் அதன் வரலாற்றையும் புதுச்சேரியின் பல சிறப்பியல்புகளையும் புதுவை அருங்காட்சியக நிறுவனர் அறிவன் மாணவியர்களுக்கு விளக்கிக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து இளைஞர் விடுதியில் இம்முற்றோதல் நிகழ்வு நடைபெற்றது. கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கலியபெருமாள் திருக்குறள் முற்றோதல் நிகழ்வினை தொடங்கி வைத்து மாணவ மாணவியர்களுக்கு பங்களிப்பு சான்றிதழினை வழங்கினார்.இந்நிகழ்வினை புதுவை அருங்காட்சியகம் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments