திருத்தணியில் நகைக்கடையை உடைத்து கொள்ளையடித்த சென்னையை சேர்ந்த பிரபல கொள்ளையன் நொண்டி முருகன் கைது,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் என்.எஸ். போஸ் தெருவில் சண்முகம் என்பவர் நகை விற்பனை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடையை உடைத்து 33 சவரன் தங்க நகை10 கிலோ வெள்ளி பொருட்கள் ரூ. 3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து சண்முகம் திருத்தணி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். திருத்தணி டிஎஸ்பி கந்தன் மேற்பார்வையில் திருத்தணி காவல் நிலைய ஆய்வாளர் மதியரசன், தலைமையில் போலீசார் அந்த கடையிலிருந்து சிசிடிவி காட்சிகள் மற்றும் காவல்துறையின் சிசிடிவி கேமராக்கள் பதிவான காட்சிகள் கைரேகை ஆகியவற்றை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதன் அடிப்படையில் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த பிரபல கொள்ளையன் நொண்டி முருகனை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொள்ளையன் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருத்தணி சண்முகம் நகை கடையில் கொள்ளை அடித்த தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை போலீசார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் அடுத்தவனை முருகனை பிடித்து திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments