வ.உ.சி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடிய தமிழக வெற்றி கழகத்தினர்.
போடிநாயக்கனூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் சுதந்திர போராட்ட தியாகி வ உ சி யின் 153 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இதனை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக மாவட்ட இளைஞரணி தலைவர் பிரகாஷ் தலைமையில் கழகத் தொண்டர்கள் அவர்களது கொடிகளை அசைத்தபடியாக அணியாக திரண்டு போடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வ.உ.சி யின் முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
கப்பலோட்டிய தமிழன் செக்கெழுத்து செம்மல் சுதந்திரப் போராட்ட தியாகி வ உ சிதம்பரனார் அவர்களது திருஉருவசிலைக்கு வணக்கம் புகழ் வணக்கம் வணக்கம் ஐயா வ.உ.சிக்கு புகழ் வணக்கம் என்று முழக்கமிட்டனர், இதில் அக்கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
No comments