உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் செல்லியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் அருள்மிகு செல்லியம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது 15 நாட்கள் நடக்கும் இந்த திருவிழா கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகமேர் திருவிழா செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று புதன்கிழமை மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி பாண்டூர் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் குளத்திலிருந்து பூசாரிகள் அலங்கரித்த பூ கரகத்தை எடுத்துக்கொண்டு கோவிலுக்கு வந்தனர் அங்கு கோவில் முன்பாக மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பிடாரி செல்லியம்மன், அய்யனார், பூரணி, பொற்கலை, விநாயகர், சுப்பிரமணிய சுவாமிகளை முத்து பல்லக்கில் மலர்களால் அலங்கரித்து ஆயிரக்கணக்கான பக்தர்களிடையே பூங்கரகத்துடன் கோவிலை சுற்றி வளம் வந்தது தொடர்ந்து பூங்கரகம் எடுத்து வந்த பூசாரி தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்தார்.
அதன் பின்பு நூற்றுக்கணக்கான பக்தர்கள் வேண்டுதலின் பேரில் தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர் அதன்பின்பு நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர் தொடர்ந்து சுவாமி வீதி உலா நடைபெற்றது.
No comments