சிந்தக்கணவாய் நடுநிலைப்பள்ளியில் கழிப்பிட வசதி இல்லாத அரசு பள்ளியின் அவலநிலை.
வேலூர் மாவட்டம் சிந்தக்கணவாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குறைந்த பட்சம் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள் ஆனால் இந்தப் பள்ளியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை குறிப்பாக மாணவர்களுக்கு கழிப்பிட வசதி இல்லை இதனால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் இது மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் ஆசிரியர்களுக்கும் இதே நிலைதான் உள்ளது.
இந்தப் பள்ளியில் 1 ஆசிரியர் 7 ஆசிரியை தலைமை ஆசிரியர் வி. அருள்மொழி என இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிகின்றனர் இந்த அவல நிலையை கல்வித்துறை மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் அமலா யுவராஜ் மற்றும் துணைத் தலைவர் ஜெயலட்சுமி யுவராஜ் ஆகியோர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு நோய் தொற்று ஏற்படாத வகையில் உடனடியாக இதனை சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
No comments