Breaking News

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட பூம்புகார் மீனவர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த தமிழக வெற்றிக் கழகத்தினர்.


சீர்காழி அருகே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட பூம்புகார் மீனவர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த தமிழக வெற்றிக் கழகத்தினர். எப்போதும் மீனவர்களுக்கு துணை நிற்போம் எனவும் உறுதியளித்து சென்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பூம்புகாரை சேர்ந்த 37 மீவர்களை நேற்று முன்தினம் எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது.இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்கள்  குடும்பத்தினரை தமிழக வெற்றிக் கழகத்தினர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.அக்கட்சியின் மாவட்ட தலைவர் குட்டிகோபி தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் பூம்புகார் துறைமுகத்தில் மீனவ பிரதிநிதிகளை சந்தித்து சம்பவம் குறித்தும் மீவர்களின் கோரிக்கை குறித்தும் கேட்டறிந்தனர்.

மேலும் தங்கள் தலைமையின் உத்தரவின் பேரில் மீனவர்களை சந்தித்து அறுதல் தெரிவிப்பதோடு தமிழக வெற்றிக் கழகம் மீனவர்களுக்கு ஆதரவாக  எப்போதும் துணை நிற்க்கும் எனவும்,தங்கள் தலைவர் மூலமாக மீனவர்கள் கோரிக்கை குறித்தும் கைது செய்யப்பட் மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகளை  வலியுறுத்துவோம் எனவும்  உறுதியளித்து சென்றனர்.

No comments

Copying is disabled on this page!