ஈரோடு மாநகரம், கருங்கல்பாளையம் அடுக்கு மாடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் லிப்ட் வேலை செய்யவில்லை.
அவர்களால் படிக்கட்டை உபயோகித்து தங்களுடைய அன்றாட வாழ்க்கையை வாழ மிகவும் கஷ்டப்படுகிறார்கள். மெயின்டென்ஸ் விளக்குகள் பழுதடைந்து கிடக்கிறது. மின்சாரம் அடிக்கடி தடைப்படுகிறது. தண்ணீர் மோட்டர் ரிப்பேர் ஆகி சரி செய்ய மறுக்கிறார்கள். சாக்கடை சேர்ந்து சுத்தம் செய்ய மறுக்கிறார்கள். அதனால் நோய்கள் பெருகும் அபாயம் உள்ளது. பலர் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு வேறு இடங்களில் வசிக்கிறார்கள். வாடகைக்கு குடியிருப்பவர்கள் அடாவடித்தனம் செய்கிறார்கள்.
சமுதாய விரோதிகள் வாடிக்கையாக இருக்கிறது. ஹவுசிங் போர்டை சுற்றியும் குடிமகன்களின் ஆதிக்கத்தில் இருந்து வருகிறது. டாஸ்மாக் பார் போலவே எப்பொழுதும் குடிகாரர்கள் கூட்டமாகவே இருக்கிறது. பெண்களாலும், முதியவர்களாலும் நடக்கவே அச்சமாக இருக்கிறது. நாங்கள் விட்டு வசதி வாரியத்திற்கு முறையாக மாதா மாதம் தவணைத் தொகையும் மெயின்டென்ஸ் தொகையும் செலுத்தி வருகிறோம். மேலேகண்ட குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம் என ஈரோடு கருங்கல்பாளையம் 272, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தாரர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் வழங்கினார்கள் என தெரிவித்தனர்.
No comments