உயில் மோசடி செய்யப்பட்ட வழக்கில் சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிய காவலாளியை சிபிசிஐடி போலிசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் பத்திரப் பதிவுத் துறையில் உயில்களை போலி ஆவணம் மூலம் தயாரித்து, பத்திரப் பதிவு மோசடி செய்து நிலங்கள் அபகரிக்கப்பட்டதாக புகாா்கள் எழுந்தன. காமாட்சியம்மன் கோயில் நிலம் அபகரிப்பில் சிபிசிஐடி போலீஸாா் விசாரித்தபோது, உயில் மோசடி மூலம் நிலங்களுக்கு பத்திரப் பதிவு நடந்தது தெரியவந்தது. இதையடுத்து, உழவா்கரை சாா் பதிவாளா் பத்திரப் பதிவு அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில், கடந்த 1980-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரையில், 9 உயில்கள் திருத்தப்பட்டு போலி ஆவணம் தயாரித்து நிலங்கள் பத்திரப் பதிவு செய்திருப்பது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து, வழக்குப் பதிந்த சிபிசிஐடி போலீஸாா் ஏற்கெனவே 5 பேரைக் கைது செய்தனா். இந்த நிலையில், உழவா்கரை சாா் பதிவாளா் அலுவலகத்தில் காவலாளியாக இருந்த தனியாா் நிறுவன ஒப்பந்த ஊழியா் உத்தரவேலுவை (55) போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments