Breaking News

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தில் பெருந்தலைவர் காமராஜரின் முழுஉருவ வெண்கல சிலை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்!


தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட பாலவிநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் புதிதாக பெருந்தலைவர் காமராஜரின் முழுஉருவ வெண்கலச்சிலை அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் கோவில் தர்மகர்த்தா ஆறுமுகபாண்டி தலைமை வகித்தார். கோவில் காரியதரிசி தங்ககுமார் முன்னிலை வகித்தார். 

விழாவில் தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காமராஜரின் முழுஉருவ வெண்கலச் சிலையை திறந்து வைத்தார். முன்னதாக ஆலய இளைஞர் குழு நிர்வாகிகள் சார்பாக காலை 6.30 மணியளவில் பெண்கள் 122 பால்குடம் எடுத்து வந்து, பின்னர் காமராஜர் சிலை அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 51 பானைகளில் பெண்கள் பொங்கலிட்டு சிறப்பித்தனர்.

விழாவில், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், தொழிலதிபர்கள் பங்குராஜ், பெரியசாமி, ஜான்சன், சேர்மபாண்டியன், வழக்கறிஞர் சிலுவை, உதவி தர்மகர்த்தாக்கள் நந்தகோபால், செல்வகுமார், தியாகராஜன், லிங்கதுரை, அழகுமுருகன், உதவி காரியதரிசிகள் பெருமாள், செல்வகுமார், முனீஸ்வரன், ராதாகிருஷ்ணன், செல்வராஜ், ஆலோசகர்கள் ஆதித்தன், மாடசாமி, பொன்வேல், திருமணி, மாரியப்பன் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

No comments

Copying is disabled on this page!