சட்டமன்ற உறுப்பினர் நேரு கோவில் திருப்பணிக்காக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட நெல்லித்தோப்பு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியபாளையத்தம்மன் திருக்கோவில் திருப்பணிகள் மற்றும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது..
கோவில் திருப்பணிக்காக முதல் தவணையாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையினை உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி சட்டப்பேரவை அரசாங்க உறுதிமொழி குழு தலைவருமான நேரு(எ)குப்புசாமி திருக்கோவில் திருப்பணிகளை மேற்கொள்ளும் கோவில் நிர்வாகத்தினரிடம் ஒரு லட்சம் ரூபாய் காசோலையை வழங்கினார்... இந்நிகழ்ச்சியின் போது அப்பகுதியை சேர்ந்த மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்கள் பலர் உடன் இருந்தனர்.
No comments