Breaking News

புதுவையைச் சோ்ந்த 3 பேரிடம் நூதன முறையில் ரூ.2.42 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


புதுச்சேரி வில்லியனூரைச் சோ்ந்தவா் செவ்வந்தி. இவரிடம் டெலிகிராம் செயலி மூலம் அறிமுகமான மா்ம நபா், பங்குச் சந்தை மூலம் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வாா்த்தை கூறியதை நம்பி,மா்ம நபா் கூறியபடி பல தவணைகளில் ரூ.1.50 லட்சத்தை முதலீடு செய்து செவ்வந்தி ஏமாந்தார்.

இதேபோல,புதுச்சேரியைச் சோ்ந்தவா் சக்தி சக்கரவா்த்தி. இவரை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்ட  பெண், அவரை மிரட்டி ரூ.17 ஆயிரத்தை மோசடி செய்துள்ளார். இதேபோல், காரைக்கால் நெடுங்காடு பகுதியைச் சோ்ந்த இலக்கியா என்பவரிடம் பகுதி நேர வேலை இருப்பதாகக் கூறிய மா்ம நபா், ரூ.75 ஆயிரத்தை மோசடி செய்தாராம். மூவரின் புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி

No comments

Copying is disabled on this page!