Breaking News

வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் தாலுகா பி.கே புரம் துளிர் பள்ளியில் ஆசிரியர் தின கொண்டாட்டம்.


வேலூர் மாவட்டம் கே.வி  குப்பம் தாலுக்கா பி.கே புரம்  துளிர் பள்ளியில் இன்று ஆசிரியர் தினத்தை மிகச் சிறப்பாக பள்ளித் தலைமை ஆசிரியர் வீரா. ச. குமரன் தலைமையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பள்ளியின் நடத்துனர் ஷோபனா  மற்றும் சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த மாவட்ட அறிவியல் துணைத் தலைவர் விஸ்வநாதன் விழாவிற்கு வருகை தந்து பள்ளி குழந்தைகளுக்கு அறிவியல் சார்ந்த சில நிகழ்வினை செய்து காண்பித்தார் மற்றும் பெற்றோர்களுக்கு குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் குழந்தைகளை எவ்வாறு நல்வழிப்படுத்த வேண்டும் என்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியருக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் அறிவுரைகளை கூறினார்.


இது பற்றி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊர் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் இது பற்றி கூறுகையில் பி.கே. புரம் துளிர் பள்ளியில் நடந்த இந்நிகழ்ச்சி மிகவும் மகிழ்ச்சியான தருணமாய் அமைந்தது என்று தெரிவித்தார்கள்


- கே.வி குப்பம் தாலுக் செய்தியாளர் க. புஷ்ப தாமன்

No comments

Copying is disabled on this page!