Breaking News

திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் மாணவர்கள் தர்ணா போராட்டம்.


திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர கோரியும், பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி கல்லூரி வாயில் பகுதியில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் இரண்டாவது நாளாக ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவ, மாணவிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு,கல்லூரி முதல்வர் அறையை முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரகோரியும், பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி கல்லூரி வாயில் பகுதியில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவ, மாணவிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். மாணவர்கள் கல்லூரி முதல்வர் அறையை முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

முதல்வர் பொறுப்பில்லாத செயல்களாலும் நடவடிக்கையாலும்
மாணவர்களின் எதிர்காலமும் கல்லூரியின் நிர்வாகமும் கேள்விக்குறியாகவும் உள்ள நிலையை சரி செய்ய கோரி கல்லூரியின் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் கவுரவவ விரிவுரையாளர்கள்
காலை,மாலை என இரு சுழற்சி முறையில் நடைபெற்ற கல்லூரியை தற்போது பொறுப்பு முதல்வர் முழு நேர கல்லூரி ஆக மாற்றியதால் மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். 


மாணவர்களிடம் பொறுப்பு முதல்வர் கல்லூரிக்கு எப்போது வேண்டு மானாலும் வரலாம், போகலாம் என தெரிவித்ததாகவும் வருகை பதிவை கேட்க மாட்டீர்களா என கேட்டதற்கு மாணவர்களிடம் உங்கள் அனைவரையும் தேர்வு எழுத வைக்க வேண்டியது எனது பொறுப்பு என தெரிவித்ததாகவும் அதனால் மாணவர்கள் வகுப்பு நடக்கும் போது உள்ளே நுழைவதும் எழுந்து செல்வதும் வாடிக்கையாகி விட்டது. இது குறித்து மாணவர்களிடம் கேட்டால் கல்லூரி முதல்வரே வருகை பதிவு தேவையில்லை என தெரிவித்துவிட்டார். என கவுரவ விரிவுரையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது.இது குறித்து கல்லூரி முதல்வரிடம் கேட்டால் நான் அப்படி தெரிவிக்கவில்லை என கூறுகிறார். 

இதனால் கல்லூரியில் அசாதாரனமான சூழ்நிலை  நிலவுகிறது.கல்லூரியில் படிக்கும் நான்காயிரம் மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது.மேலும் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் கவுரவ விரிவுரையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.


கவுரவ விரிவுரையாளர்களை சந்திக்க பொறுப்பு முதல்வர் மறுக்கிறார் எனவே இதை கண்டித்து தான் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர். கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


இதைத்தொடர்ந்து முதல்வர் அறையை மாணவர்கள் முற்றுகை யிட்டு ரகளையில் ஈடுபட்டனர்.மாணவர்கள் பொறுப்பு முதல்வர் நாராயணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை பேராசிரியர்கள், போலீசார் சமாதானப்படுத்தினர். இதனால் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments

Copying is disabled on this page!