புதுச்சேரி டீ வியாபாரியை வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில்,17 வயது சிறுவன் உட்பட 7 பேரை போலிசார் கைது செய்தனர்
புதுச்சேரி மேட்டுப்பாளையம் சாணரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாபு (எ) டீ பாபு (44). ரவுடியான இவர் தற்போதைய ஆளும் கட்சியை சேர்ந்த அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகத்தின் ஆதரவாளர் ஆவார். இப்போது இவர் திருந்தி தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில், ‘டீ’ வினியோகிக்கும் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை அருகே மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில்,
டீ பாபுவை கொலை செய்தது, மேட்டுப்பாளையம் ரவுடியான புளியங்கொட்டை (எ) ரங்கராஜன் தலைமையிலான கும்பல் என தெரியவந்தது.
இதனையடுத்து திருவக்கரை கல்குவாரி அருகே பதுங்கியிருந்த, சாணரப்பேட்டை ரங்கராஜன் (25), பில்லு (எ) பிரதீஷ் (21), வினித் (எ) அனித் (23), சரவணன் (21), ராஜேஷ் (25), சூர்யா (எ) ஜெயசூர்யா (21), மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 7 பேரை போலீசார் பிடித்து புதுச்சேரி கொண்டு வந்தனர்.
முதல்கட்ட விசாரணையில் ரவுடி ரங்கராஜன் மீது 2 கொலை வழக்கு, கொலை முயற்சி உள்ளிட்ட 13 வழக்கு உள்ளது. கொலை செய்யப்பட்ட டீ பாபுவுக்கும், ரங்கராஜனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் டீ பாபுவை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சிறுவன் உட்பட 7 பேர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி அதில் 6 பேரை சிறையில் அடைத்தனர். சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர்.
No comments