Breaking News

மத்தூர் அடுத்த கவுண்டனூர் ஊராட்சிக்கு வரி ஏய்ப்பு: கல்வி நிறுவனம், வணிக நிறுவனங்கள் மற்றும் பெட்ரோல் பங்க் மீது பாமக ஒன்றிய செயலாளர் குற்றச்சாட்டு.


கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த கவுண்டனூர் ஊராட்சியில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தனியார் கல்வி நிறுவனம் மற்றும் புதிதாகத் தொடங்கப்பட்ட பெட்ரோல் பங்க் நிலையம் மற்றும் வணிக நிறுவனங்கள்  ஊராட்சிக்குரிய வரியை செலுத்தாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக,  கல்வி நிறுவனம் சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வரி பாக்கி ஜந்து வருடமாக  வைத்துள்ளதாக கூறப்படுகிறது, இவ்வாறு முக்கிய நிறுவனங்கள் வரி செலுத்தாமல் இருப்பதால், ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு, ஊர் மக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு திட்டங்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர்  கவலை தெரிவிக்கின்றார். 

ஊராட்சி நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபோன்ற வரி ஏய்ப்பு செயல்கள், உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையைப் பாதித்து, ஊர் வளர்ச்சியைத் தடுக்கும் என்பதால், இதுகுறித்து அரசு உடனடியாக தலையிட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். என பாமக ஒன்றிய செயலாளர் சந்திரன்  பேட்டி அளித்தார்

No comments

Copying is disabled on this page!