முன்னாள் சென்ற டேங்கர் லாரி மீது தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்து.
சென்னையில் இருந்து தனியார் சொகுசு பேருந்து ஒன்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு திருச்சிக்கு சென்று கொண்டிருந்தது இந்த பேருந்து இன்று அதிகாலை சுமார் 4:30 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூர் ஜிஎஸ்டி சாலையில் அதிவேகமாக வந்து கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியின் பின்பக்கம் பயங்கரமாக மோதியது இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சென்னை திருச்சி நான்கு வழி சாலையில் இருந்த சென்டர் மீடியனைத் தாண்டி வலது புற சாலையில் சென்று திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த மினி லாரி மீது டேங்கர் லாரி மோதியது இதில் இரண்டு லாரிகளில் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.
அப்போது மினி லாரியின் பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு தனியார் சொகுசு பேருந்து மினி லாரி மீது மோதாமல் இருப்பதற்காக அதன் ஓட்டுனர் பேருந்தை இடது புறமாக திரும்பிய பொழுது சாலையின் ஓரம் இருந்த பள்ளத்தில் தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்தது அடுத்தடுத்து நடந்த இந்த விபத்தின் காரணமாக 2 பேருந்துகளின் ஓட்டுநர்கள் 2 லாரிகளின் ஓட்டுநர்கள் மற்றும் 2 பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர். விபத்தில் காயமடைந்த 15 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டனர்.
சென்னை திருச்சி நான்கு வழி சாலையில் நடந்த இந்த விபத்தின் காரணமாக விபத்துக்குள்ளான வாகனங்கள் சாலையிலேயே இருந்ததால் சென்னை திருச்சி நான்கு வழி சாலையில் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது இது பற்றி தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நவீன இயந்திரங்கள் மூலம் விபத்துக்குள்ளான வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
இந்த விபத்துக்கு குறித்து திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments