சீர்காழியில் மண்டல அளவிலான கால்பந்து தேர்வு போட்டி.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தஞ்சை மண்டல அளவிலான கால்பந்து தேர்வு போட்டி நடைபெற்றது.
அகில இந்திய விளையாட்டு குழுமம் சார்பில் தஞ்சை மண்டல அளவில் அனைத்து பிரிவுகளுக்குமான கால்பந்து போட்டி தேர்வு இரண்டு நாட்கள் நடைபெற்றது. விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே வி ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வி. உமாநாத் முன்னிலை வகித்தார்.
தேர்வு பெற்ற மாணவர்களை வாழ்த்தி அதற்கான ஆணையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பி. ஜெகநாதன் வழங்கினார். தேர்வு போட்டியை உடற்கல்வி ஆசிரியர்கள் செல்லதுரை, சுதாகர், செந்தில்குமார், ரமேஷ் ,விஜய மீனாட்சி, ராம்சதீஷ், ராஜசேகர், சிதம்பரம் ஆகியோர் நடத்தினார்கள்.
No comments