தமிழக வெற்றி கழக கட்சி அங்கீகரிக்கப்பட்டது மற்றும் மாநாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து திண்டிவனத்தில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது. தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். அதைச் சட்டப்பூர்வமாகப் பரிசீலித்த நமது நாட்டின் தேர்தல் ஆணையம், தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற அனுமதி வழங்கி உள்ளது. இதை உங்களோடு பகிர்ந்துகொள்வதி- பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக. இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது. இச்சூழலில், நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள். தடைகளைத் தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, கொள்கை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கானத் தலையாய அரசியல் கட்சியாகத் தமிழ்நாட்டில் வலம் வருவோம். வெற்றிக் கொடியேந்தி மக்களைச் சந்திப்போம்! வாகை சூடுவோம்” என விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் வருகின்ற 23 ஆம் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டுக்கான அனுமதியை 33 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கினர்.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இதே போல் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் திண்டிவனம் நகரம், மற்றும் மரக்காணம், ஒலக்கூர் ஒன்றியங்கள் சார்பில் விழுப்புரம் தெற்கு மாவட்ட தொண்டரணி தலைவரும் திண்டிவனம் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணை ப்பாளருமான சக்திவேல் தலைமையில் திண்டிவனம் மேம்பலத்தின் கீழ் பகுதியில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி தமிழக வெற்றி கழகத்தினர் கொண்டாடினர்.
இதில் திண்டிவனம் நகர நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், மரக்காணம் நகரம், ஒன்றியம், ஒலக்கூர் ஒன்றியம் உள்ளிட்ட நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments