காரைக்காலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் போதைப் பொருள் எதிர்ப்பு பேரணி பெண்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் போதைப் பொருள் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காரைக்கால் மாவட்ட தலைவர் ஜெயினுல் ஆபீதீன் தலைமையில் காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அலுவலகத்திலிருந்து மாவட்டத்தின் முக்கிய வீதியில் வழியாக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு முழக்கங்களுடன் பெண்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் புதிய பேருந்து நிலையம் வரை பேரணியாக வந்தனர்.
பேரணியின் இறுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் அல் அமீன் சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர் போதை பொருட்கள் சமுதாயத்தை சீரழிப்பதாகவும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இதில் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் நாளைய சமுதாயம் சீர்கேடும் நிலை ஏற்படும் எனவும் இதனை அரசு உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். நிறைவாக காரைக்கால் மாவட்ட செயலாளர் பயாசுதீன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
No comments