Breaking News

மயிலாடுதுறை அருகே சுமங்கலி மற்றும் பாதாள காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம்.


மயிலாடுதுறை அருகே சுமங்கலி மற்றும் பாதாள காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம், 18 அடி உயர பிரம்மாண்ட பாதாள காளியம்மனுக்கு மூலவர் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் பக்தி பரவசத்துடன் பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை கிராமத்தில் சுமங்கலி காளியம்மன் மற்றும் பாதாள காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் கடந்த ஐந்தாம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர மற்றும் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து நான்கு கால யாக சாலை பூஜைகள் இன்று காலை நிறைவேற்றப்பட்டது மேள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடாகி கோபுரத்தை வந்தடைந்தது. 


பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து 18 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட பாதாள காளியம்மனுக்கு மூலவர் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

No comments

Copying is disabled on this page!