உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி.
உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட செவிலியர் கல்லூரி மாணவ மாணவிகள் பேரணியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10-ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் வளர்ந்து வரும் சமுதாயத்தினர் இடையே அதிக அளவில் ஏற்படும் தற்கொலை எண்ணங்களை தடுக்க வேண்டும் என்ற வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தேசிய மனநல திட்டத்தின் சார்பில் உலக தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. புதுச்சேரி சுகாதார இயக்குனர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பேரணியை சுகாதாரத் துறை துணை இயக்குனர் டாக்டர் ரகுநாத் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் செவ்வேல் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணியில் புதுச்சேரி அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் செவிலியர் மாணவ மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திய படி புதுச்சேரி நகர முழுவதும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
-/இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments