காரைக்காலில் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள்.
காரைக்கால் மாவட்டத்தில் கனரக வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதாலும் மண் ஏற்றிச் செல்லும் லாரிகள் மண்ணை மூடாமல் செல்வதாலும் விபத்துக்கள் ஏற்படுவதாக காரைக்கால் மாவட்ட ஆட்சியருக்கு பல்வேறு புகார்கள் வந்து நிலையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் உத்தரவின் பேரில் காரைக்கால் போக்குவரத்து துறை அதிகாரிகள் இன்று திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வட்டார போக்குவரத்து அதிகாரி பிரபாகர் ராவ் தலைமையில் நடைபெற்ற வாகன சோதனையில் அனைத்து வகை வாகனங்களும் ஜிபிஎஸ், வேக கட்டுப்பாட்டு கருவி, கூடுதல் பாரம், மாசு மற்றும் பிற சரியான பதிவுகள் சரிபார்க்கப்பட்டன. சோதனையின் போது, குறிப்பாக அனைத்து சரக்கு வாகனங்களும் சோதனை செய்யப்பட்டதில், அனைத்தும் தார்ப்பாய் மூலம் மூடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
ஆவனங்கள் இல்லாமல் பயணித்ததற்காக ஒரு டாடா AC, வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது. வாகன சோதனையில் மோட்டார் வாகன ஆய்வாளர் தக்ஷிணாமூர்த்தி உள்ளிட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
No comments