Breaking News

ஆண்டிமடம் அருகே தஞ்சாவூரசாவடியில் திடீர் சாலை மறியல் போலீசார் சமரசம்.


அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே தஞ்சாவூராசாவடி கிராமத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இந்த கிராமத்தில் ஒரு மினி பவர் பேங்க் சுமார் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நீர் தேக்க தொட்டியும் உள்ள நிலையில் கடந்த மூன்று மாத காலமாக பொதுமக்களுக்கு குடிநீர் வராததால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையில் இதனை கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென ஸ்ரீமுஷ்ணம் ஆண்டிமடம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட வந்த போது தகவல் அறிந்த போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் இரண்டு நாளில் குடிநீர் ஏற்பாடு செய்வதாகவும் அதோடு புதியதாக மின் மோட்டார் இணைக்க போவதாகவும் பொதுமக்களை இடையே தெரிவித்தனர் இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டன இதில் கிராம முக்கியஸ்தர்கள் நாட்டாமை கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

No comments

Copying is disabled on this page!