Breaking News

சீர்காழி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் திடீர் தீ; அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் புகையால் மூச்சுத் திணறலால் அவதி.


மயிலாடுதுறை மாவட்டம்,  ஈசானிய தெருவில் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு மற்றும் மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரிக்கும் கிடங்கு உள்ளது. இந்த பகுதியில் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் குடியிருப்பு, வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் காலை மாலை சேகரிக்கப்படும் குப்பைகளை இங்கு வந்து தான் கொட்டப்பட்டு பின்னர் தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் பல இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஈசானிய தெருவில் கொட்டப்பட்டு மலை போல் ஆங்காங்கே குவியலாக காட்சியளித்து. வருகிறது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு புகை மண்டலத்தால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று குப்பை கிடங்கில்  ஏற்பட்ட தீயால் பல்வேறு இடங்களில் குப்பைகள் கொழுந்துவிட்டு எரிவதால் அந்தப் பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது இதன் காரணமாக இந்த பகுதி அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் மூச்சுத் திணறல் கண் எரிச்சல் ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. 


மேலும் இந்த வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனம் தெரியாததால் கடும் சிரமத்திற்கு இடையில் சாலையை கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குப்பை கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயை உடனே அணைக்க வேண்டும் என. அப்பகுதி சேர்ந்த குடியிருப்பு வாசிகள் தெரிவித்து வருகின்றன.

No comments

Copying is disabled on this page!