Breaking News

43வது மாநில அளவிலான சப் ஜூனியர் பால் பேட்மிண்டன் போட்டிகள் துவக்கம்.


43வது மாநில அளவிலான சப் ஜூனியர் பால் பேட்மிண்டன் போட்டிகள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூரில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து 38 ஆண்கள் அணி கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த பத்து விளையாட்டு வீரர்களில் ஏழு பேர் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் விருதுநகர் மாவட்ட அணி முதன் முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று, தங்கப் பதக்கத்தையும், வெற்றி கோப்பையையும் கைப்பற்றினர். இதற்கு முழு ஒத்துழைப்பு  அளித்த வத்திராயிருப்பு இந்து ஹை ஸ்கூல் அண்ட் சத்திரம் கமிட்டி தலைவர், செயலர் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரியர் பெருமக்கள், அலுவலக நண்பர்கள் ஆகியோருக்கு எங்களுடைய நன்றிகள் பல. மேலும் எங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த விருதுநகர் மாவட்ட பூப்பந்தாட்ட கழக தலைவர், செயலர் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 


இதில் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த A.ராஜ பிரவீன் மற்றும் N கமலேஷ் ஆகிய 2 மாணவர்கள் இந்த மாதம் 25 முதல் 29 வரை அரியானா மாநிலத்தில் நடைபெறக்கூடிய தேசிய பட்டய ( National Championship) போட்டிக்கு தமிழக அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாய்ப்பை எங்களுக்கு நல்கிய தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழக தலைவர், பொதுச்செயலாளர் அண்ணன் திரு வி எழிலரசன், பொருளாளர் திரு. பார்த்திபன், இணைச்செயலாளர் திரு வெள்ளைப் பாண்டியன், உதவி தலைவர் திரு டாக்டர் A சீனிவாசன் மற்றும் மாநில கழக நிர்வாகிகள் அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

No comments

Copying is disabled on this page!