மயிலாடுதுறையில் இளம் தொழில் முனைவோர் திறனை ஊக்குவிக்கும் விதமாக மாணவர்களுக்கு விற்பனை சந்தை நடைபெற்றது.
இந்திய திருநாட்டின் பாரம்பரிய உணவு வகைகள், மூலிகைகளால் ஆன சிற்றுண்டிகள், அடுப்பு இல்லாது சமைத்த நொறுக்கு தீனிகள், ஐஸ்கிரீம், காய்கறி சூப், பழச்சாறுகள், மாணவர்களை உற்சாகப்படுத்தும் விளையாட்டுக்கள், கைவினைப் பொருள்கள், பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள், ஒப்பனைப் பொருள்கள் என 90 கிட்ஸ்யின் விருப்பமான சிற்றுண்டிகள் முதல் 2கே கிட்ஸ் விரும்பி உண்ணும் உணவுகள் வரை மாணவர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு பல்வேறு பொருட்கள் மாணவர்கள் விற்பனை சந்தையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது காண்போரை கவர்ந்தது.
மயிலாடுதுறை அரசு உதவி பெறும் ஏவிசி கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பிரிவு மற்றும் ஐ .கியூ .ஏ.சி பிரிவும் இணைந்து இளம் தொழில் முனைவோர் திறனை ஊக்குவிக்கும் விதமாக மாணவர்களுக்கு விற்பனை சந்தை நடைபெற்றது.
கல்லூரியின் பல்நோக்கு அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்திய திரு நாட்டின் பாரம்பரிய உணவு வகைகள் ,மூலிகைகளால் ஆன சிற்றுண்டிகள், அடுப்பு இல்லாது சமைத்த நொறுக்கு தீனிகள், ஐஸ்கிரீம், காய்கறி சூப், பழச்சாறுகள், மாணவர்களை உற்சாகப்படுத்தும் விளையாட்டுக்கள், பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள், ஒப்பனைப் பொருள்கள், மெஹந்தி போடுதல், மாணவர்களால் உருவாக்கப்பட்ட கைவினைப் பொருள்கள் என பல்வேறு வகையில் அரங்குகள் அமைந்திருந்தன. மாணவர்கள் விற்பனை சந்தையினை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசரும் ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியுமான கே.வெங்கட்ராமன் ரிப்பன் வெட்டி விற்பனை சந்தையை திறந்து வைத்து முதல் விற்பனையை துவங்கி வைத்தார்.
இதில் கல்லூரியின் முதல்வர் ஆர்.நாகராஜன், தேர்வு நெறியாளர் மேஜர் ஜி.ரவிசெல்வம், துணை முதல்வர் எம்.மதிவாணன், டீன் முனைவர் எஸ். மயில்வாகனன், கல்லூரியின் கல்வி ஆலோசகர் முனைவர் மகாலக்ஷ்மி, ஏவிசி பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி இயக்குனர்கள் எம்.செந்தில்முருகன் மற்றும் ஏ.வளவன், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எஸ்.கண்ணன் மற்றும் பல் துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments