வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகம், புதுவை மாநிலங்களில் பரவலாக மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரி பழைய துறைமுகத்தில் உள்ள புயல் எச்சரிக்கைக் கூண்டில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. துறைமுகத்திலிருந்து தொலைவில் புயல் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கும் வகையில் இது ஏற்றப்பட்டுள்ளது.
இந்த புயல் கூண்டு எச்சரிக்கையானது காரைக்கால் மற்றும் தமிழகத்தின் கடலூா் உள்ளிட்ட 9 துறைமுகங்களிலும் ஏற்றப்பட்டுள்ளதாகவும் மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் புதுவை மீனவா்கள் கவனமுடன் செல்லும்படி மீன் வளத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
- இரா. சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments