Breaking News

ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை - ஆளுநர் கைலாஷ்நாதன் பேட்டி.


புதுச்சேரியில் உள்ள 80 நீர்நிலைகளை பாதுகாத்து, புதுச்சேரிக்கு குடிநீர் தேவை மற்றும் விவசாய தேவைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றும் ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று கோர்க்காடு ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் தங்களது குறைகளை துணைநிலை ஆளுநரிடம் தெரிவிக்கவிடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கிருந்து பெண்கள் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை முற்றுகையிட்டு, ஏரிக்கரையோரம் உள்ள தங்களது வீடுகளில் மழைகாலங்களில் தண்ணீர் புகுந்து பாதிக்கப்படுவதாகவும், அதிகாரிகள் எங்கள் பகுதியை வந்து பார்வையிடுவதில்லை என சராமாரியாக குற்றம்ச்சாட்டினர். மேலும் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், நியாயவிலைக் கடைகளை திறக்க வேண்டுமென தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆளுநர் கைலாஷ்நாதன், புதுச்சேரியில் உள்ள நீர்நிலைகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம், புதுச்சேரியில் உள்ள 80 நீர்நிலைகளை பாதுகாத்து, புதுச்சேரிக்கு குடிநீர் தேவை மற்றும் விவசாய தேவைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


- இரா. சரவணன் செய்தியாளர் புதுச்சேரி 

No comments

Copying is disabled on this page!