ஈரோடு, வெள்ளோடு அருகே பெரிய தொட்டிபாளையத்தில் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம்,தென்முகம் வெள்ளோடு கிராமம் பெரிய தொட்டிபாளையத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மஹாமாரியம்மன் கோவிலின் கும்பாபிஷேக திருவிழா கடந்த வியாழக்கிழமை இரவு கிராமசாந்தி நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து கணபதி பூஜை, யாக பூஜை, கங்கனம் கட்டுதல், கும்ப அலங்காரம் என தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. அப்போது, விக்கிரகங்களுக்கு காப்புகள் கட்டப்பட்டு, நான்காம் கால பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, மூலாலய தெய்வங்களுக்கு தீபாராதணைகள் காண்பிக்கப்பட்டதை அடுத்து, கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து 5000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
No comments