உளுந்தூர்பேட்டை அருகே ஜவஹர்லால் நேரு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர்வுக்கு படி சிறப்புத் திட்ட முகாம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாலி பகுதியில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் உயர்வுக்கு படி சிறப்பு திட்ட முகாம் நடைப்பெற்றது. இம்முகாமினை கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தொடங்கி வைத்தார், முகாமில் விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சார்ந்த அரசு மற்றும் தனியார் கலை கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள், தொழிற்ப்பயிற்சி நிலையங்கள் மருத்துவம் சாரா கல்வி நிறுவனங்கள் என 18 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன.
இதில் பிளஸ்-2 பொதுத்தேவை தேர்ச்சி பெற்ற தேர்ச்சி பெறாத நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர், தொடர்ந்து கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள படிப்புகளில் மாணவ மாணவிகளை சேர்த்தனர், இவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா மற்றும் திறன் மேம்பாட்டு கழக உதவி இயக்குனர் சிவ நடராஜன் ஆகியோர் வழங்கினர்.
இம்முகாமில் நான் முதல்வன் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணியன், ஒருங்கிணைப்பாளர்கள் கோவிந்தன், சண்முகம் ஜவர்ஹலால் நேரு மகளிர் கல்லூரியின் தாளாளர் ஜெயராமன், செயலர் ஜே.எஸ்.ஏ அருண், கல்லூரியின் நிர்வாக இயக்குனர் கண்மணி, முதல்வர் பிரபா குமரவேல், இயக்குனர் மகேஸ்வரன், மக்கள் தொடர்பு அலுவலர் பாலச்சந்திரன் நிர்வாக அலுவலர் சரவணப்பிரியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments