Breaking News

உளுந்தூர்பேட்டையில் வி.சி.க மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற உள்ளது இதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற உள்ளது இதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் அறிவுக்கரசு தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கட்சியின் முதன்மை செயலாளர் ஏ.சி.பாவரசுமற்றும் மகளிர் அணி மாநில துணை செயலாளர் பவளக்கொடி உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாநாட்டிற்கு அதிக பெண்களை திரட்டுவது எனவும் அதற்கான கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவது எனவும் வரும் பெண்களுக்கு சீருடை வழங்குவது குறித்தும் வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் மகளிர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி அவர்களுக்கு போதுமான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 

No comments

Copying is disabled on this page!