கரூரில் அரசு கலைக் கல்லூரியில் ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் துறை சார்பில் ஐம்பெரும் விழா
கரூர் மாவட்டம் அரசு கலைக் கல்லூரி சார்பில் ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை துறை ஊட்டச்சத்து வார கொண்டாட்டம் ஐம்பெரும் விழாவாக கொண்டாடினார்கள்.
கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார், ஊட்டச்சத்து வார விழாவில் மூன்றாம் நாள் இன்று அரசு கலைக் கல்லூரி உணவு முறைகள் மற்றும் நோய் விழிப்புணர்வு கண்காட்சி இலவச ஊட்டச்சத்து ஆலோசனை மையத்தை பார்வையிட்டு துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் துறையில் பயிலும் மாணவர்களுடைய காய்கனிகளின் சிறப்பு வேலைபாடு. தீ மற்றும் தீயில்லா சமையல் என்ற தலைப்பில் உணவுகள் தயாரிக்கும் போட்டி நடத்தப்பட்டு காட்சியளிக்கப்பட்டது.
இதனை பேராசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் ஆர்வத்தோடு பங்கேற்று பயன்பட்டனர் இவ்விழாவின் ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் துறை தலைவர் ஜாகிர் உசேன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதனை தொடர்ந்து இன்றைய இருக்கும் காலகட்டங்களில் உணவு பழக்கத்தையும் பண்டை காலகட்டங்களில் உணவு முறைகளை பற்றி மாணவர்கள் எடுத்துரைத்தனர். கல்லூரி முதல்வர் அலெக்சாண்டர் பேராசிரியர்கள் மாணவர்கள் மாணவிகள் கண்காட்சியில் பங்கேற்று பார்வையிட்டனர்.
No comments