அம்மாவாசை ஒட்டி பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அனந்தமங்கலம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ராஜகோபால சாமி கோவில் என அழைக்கப்படும் திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் மூன்று கண்கள் பத்து கரங்களை உடையவர் சங்கு சக்கரம் சூலம் கபாலம் மழு பாசம் வில் அம்பு சாட்டை நவநீதம் ஆகியவற்றைக் கரங்களில் ஏந்தி முதுகின் இரு பக்கங்களிலும் கருடனின் சிறகுகளோடு காட்சி அளிப்பவர் இப்பெருமை இக் கோயிலுக்கு மட்டுமே உள்ளது ஆஞ்சநேயர் தனி சன்னதியில் அமைந்திருப்பதும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது ஆனந்த வாழ்வு தரும் ஆஞ்சநேயர் என்பதும் சிறப்பு அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மேலும் வாரம் தோறும் சனிக்கிழமைகளிலும் அமாவாசை அன்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தொடர்ந்து அர்ச்சனைகள் செய்யப்படும் இன்று அமாவாசை என்பதால் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சிறப்பு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.
No comments