சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு கோ பூஜை வழிபாடு நடந்தது. 63 நாயன்மார்களுக்கு வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.மலைக்கோயிலில் சட்டைநாதர் சுவாமி, தோணியப்பர் - உமா மகேஸ்வரி அம்மன் அருள்பாலிக்கின்றனர். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு கோ பூஜை வழிபாடு நடந்தது.
முன்னதாக கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோசாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட புங்கனூர் வகை குட்டை பசுமாடு மற்றும் கன்றுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பசு மாட்டிற்கு பழங்கள், அகத்திக்கீரை வழங்கி வலம் வந்து வழிபட்டனர்.
தொடர்ந்து 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. முன்னதாக காட்சி கொடுத்த நாயகருக்கு சிறப்புஅபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் தீபாராதனை நடந்தது .தொடர்ந்து திரளான பக்தர்கள் தேவார பதிகங்கள் பாடி 63 நாயன்மார்களுக்கு வழிபாடு செய்யப்பட்டது.
No comments