Breaking News

பிரிட்டிஷ் அரசின் சாதனையை எடுத்துச் சொல்வதற்காக மாதம் 67 ரூபாய் சம்பளம் வாங்கிய சவர்க்கரின் வரலாற்றை தமிழ்நாடு பாடத்திட்டத்தில் சேர்க்க முடியாது - தமிழக சபாநாயகர் அப்பாவு பேச்சு.


பிரிட்டிஷ் அரசின் சாதனையை எடுத்துச் சொல்வதற்காக மாதம் 67 ரூபாய் சம்பளம் வாங்கிய சவர்க்கரின் வரலாற்றை தமிழ்நாடு பாடத்திட்டத்தில் சேர்க்க முடியாது என்றும் தமிழ்நாடு அரசு பள்ளிகள் குறித்தும் தமிழ்நாடு அரசின் மாநில பாடத்திட்டம் குறித்து விமர்சனம் செய்வதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஆளுநருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் . 

தமிழ்நாடு அரசின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழாவை மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மதுரையில் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து திருநெல்வேலியில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி அட்டைகளை வழங்கினார்.  

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு , சனாதன தர்மத்தை பாடத்திட்டத்தில் வைக்கவில்லை என்றும் சாவர்க்கர் வரலாறு இல்லையே என்றும் தமிழ்நாடு ஆளுநர் வருத்தப்படலாம்  சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்த போது மூன்று முறை மன்னிப்பு கடிதம் கொடுத்தும் அது ஏற்கப்படாத நிலையில் நான்காவது முறை மன்னிப்பு கடிதம் கொடுத்து வெளியே வந்த சாவர்க்கர் பின் நாட்களில் பிரிட்டிஷ் அரசின் சாதனையை எடுத்துச் சொல்ல மாதம் 67 ரூபாய் சம்பளம் வாங்கினார் காட்டியும் கொடுத்து மன்னிப்பு கேட்ட  சாவர்க்கரின் வரலாற்றை எப்படி குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க முடியும் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் சேர்க்க முடியாது சுதந்திரத்திற்காக போராடிய வ உ சி போன்ற சிறந்த சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை தமிழ்நாடு பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளோம். 

புதிய கல்விக் கொள்கை மூலமாக மீண்டும் ஆர் எஸ் எஸ் மற்றும் சனாதன சித்தாந்தத்தை கொண்டுவர பார்க்கிறார்கள் 10 சதவிகித உயிர் வகுப்பினர் மட்டும் படிக்க வேண்டும் 90% படிக்கக் கூடாது எனவும் ஆளுநர் ஆசைப்படுகிறார் . அத்துடன் தமிழ்நாடு அரசு பள்ளிகள் குறித்தும் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டங்கள் குறித்து விமர்சனம் செய்வதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கடந்தாண்டு பெய்த பெரும் மழையால் தோவாளை கால்வாயில் பெரும் உடைப்பு ஏற்பட்டு உடைப்புகள் சரி செய்யப்பட்டு தற்போது குமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை கால்வாய் பாசனத்தில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு அதை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து தோவாளை கால்வாயில் உள்ள ராதாபுரம் கால்வாய்க்கு  150 கன அடி தண்ணீர் வீதம் இன்னும் சில நாட்களில் தண்ணீர் திறந்து விடப்படும்.

அதன் மூலம் ராதாபுரம் கால்வாய் பாசனத்தில் உள்ள 52 குளங்களுக்கும் நீர் நிரப்பப்படும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மொத்தம் 727 கோடி ரூபாய் கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஏற்கனவே 302 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரே நாளில் 54 கோடி ரூபாந் கடனுதவி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Copying is disabled on this page!