Breaking News

கோழிக்கூண்டில் புகுந்த கொடிய விஷம் கொண்ட 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு.


உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வெள்ளையூர் கிராமத்தில் கோழிக்கூண்டில் புகுந்த கொடிய விஷம் கொண்ட 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு மூன்று கோழி முட்டைகளை உட்கொண்டதால் நகர முடியாமல் இருந்தது அதை தீயணைப்பு படை வீரர்கள் பிடித்து காப்பு காட்டில் பத்திரமாக விட்டனர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வெள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் விவசாயியான இவர் தனது வீட்டின் அருகில் ஆட்டு கொட்டகையும் அதில் கோழி கூண்டும் கட்டி உள்ளார் இந்த நிலையில் தனது வீட்டில் இருந்த கோழி 5 முட்டையிட்ட நிலையில் அதனை முருகன் மனைவி பானு கோழி கூண்டில் வைத்துள்ளார்.


இந்த நிலையில் புதன்கிழமை மாலை ஆடுகளுக்கு புல் அறுத்து வந்து கொட்டகையில் போட்டுவிட்டு கோழி முட்டையை பார்ப்பதற்காக பானு முட்டை மேல் வைத்திருந்த துணியை அறிவாளால் தூக்கிப் பார்த்தபொழுது அங்கு சுமார் 5 அடி நீளம் கொண்ட கொடிய விஷத்தன்மை வாய்ந்த நாகப்பாம்பு மூன்று முட்டைகளை உட்கொண்டு நகர முடியாமல் திணறய படி கிடந்தது.


இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பானு அங்கு இருந்தவர்களிடம் கூறிய நிலையில் இது குறித்து உடனடியாக உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதன் பேரில் நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று கோழி கூண்டில் இருந்த 5அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை நவீன கருவி மூலம் உயிருடன் பிடித்து அதனை எடைக்கல் காப்பு காட்டில் பத்திரமாக விட்டனர்.

No comments

Copying is disabled on this page!