வீட்டில் கிரைண்டரின் அடியில் புகுந்து கொண்ட ஐந்து அடி நீள நல்ல பாம்பு; பாம்பு பிடி வீரர் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டார்.
மயிலாடுதுறை அருகே பெரியமடப்புரம் கிராமத்தில் வீட்டின் ஸ்டோர் ரூமுக்குள் கிரைண்டரின் அடியில் புகுந்து கொண்ட ஐந்து அடி நீள நல்ல பாம்பு; பாம்பு பிடி வீரர் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரியமடப்புரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது வீட்டில் இன்று நல்லபாம்பு ஒன்று உள்ளே புகுந்தது. இதைக்கண்ட வீட்டின் உரிமையாளர் செந்தில்குமார் சீர்காழியை சேர்ந்த பாம்புப்பிடி வீரரான ஸ்னேக் பாண்டியன் என்பவருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற பாண்டியன், வீட்டின் ஸ்டோர் ரூமுக்குள் புகுந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த கிரைண்டருக்கு அடியில் பதுங்கி இருந்த 5 அடி நீள நல்ல பாம்பை லாவகமாக பிடித்து மீட்டார். தொடர்ந்து அந்த பாம்பினை அடர்ந்த வனப்பகுதியில் விட்டார்.
No comments