வாணியம்பாடி அருகே பள்ளி மாணவர்களின் வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தி முட்புதரில் வீசிய ஒற்றை காட்டுயானை.
வாணியம்பாடி அருகே பள்ளி மாணவர்களின் வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்களை சேதப்படுத்திய முட்புதரில் வீசிய ஒற்றை காட்டுயானை, அலறியடித்து ஓடி உயிர்தப்பிய பள்ளி மாணவர்கள், மற்றும் பொதுமக்கள்.
திருப்பத்தூர் மாவட்டம். புதூர் நாடு, சேர்க்கனூர், தகரகுப்பம், ரங்க சமுத்திரம் ஆகிய மலை கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை, குனிகாந்தூர் மலை கிராமத்தில் உள்ள ஜவ்வாதுமலை வாழ்மக்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் புதூர் நாடு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 22 பள்ளி மாணவர்கள், விடுமுறை என்பதால், தங்களது பெற்றோர்களுடன் வாகனம் மூலம் மலைச்சாலை வழியாக ஊர் திரும்பிய போது, திருப்பத்தூர் மாவட்டம். காவலூர், அருணாச்சலக்கொட்டாய் என்ற பகுதியில் வாகனம் சென்று கொண்டிருந்த போது, மலைச்சாலையில் ஒற்றை தந்தம் உடைய ஒற்றை காட்டுயானை நின்றிருப்பதை அறிந்த வாகன ஓட்டுநர், வாகனத்தை நிறுத்திவிட்டு பள்ளி மாணவர்களை உடனடியாக கீழே இறக்கியுள்ளார், அப்பொழுது ஒற்றைகாட்டுயானை பள்ளி மாணவர்கள் சென்ற வாகனத்தை தாக்கி, வாகனத்தை முட்புதரில் தள்ளியுள்றது.
இதனால் பள்ளி மாணவர்களும் அவர்களது பெற்றோரும் புத்தகபையை அங்கேயே விட்டு விட்டு, அங்கிருந்து அலறியடித்து ஓடியுள்ளனர், அதில் சில மாணவர்களுக்கு சிறுகாயம் ஏற்பட்ட நிலையில், மேலும் அவ்வழியாக சென்ற 2 இரண்டு வாகனத்தையும் ஒற்றை காட்டுயானை மிதித்து சேதப்படுத்தியுள்ளது, உடனடியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களும் அங்கிருந்து தப்பியோடி அருகில் நிலப்பகுதியில் இருந்த குடியிருப்பில் தஞ்சமடைந்துள்ளனர், உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆலங்காயம் வனத்துறையினர், மற்றும் காவலர் காவல்துறையினர் மாற்று வாகனம் ஏற்பாடு செய்து, பள்ளி மாணவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்,
மேலும் விவசாய நிலத்தில் ஒற்றை காட்டுயானை நுழையாத வண்ணம் மலைகிராம மக்கள் ஒற்றை காட்டுயானையை விரட்டும் பணியில் ஈடுப்பட்டனர், மேலும் பள்ளி மாணவர்கள் ஒற்றை காட்டு யானையிடம் சிக்கி மயிரிழையில் உயிர்தப்பிய நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பு.லோகேஷ் திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர்.
No comments