Breaking News

தீவனூர் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவமம் நடைபெற்றது.


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தீவனூர் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட  உற்சவர் ஸ்ரீ பொய்யாமொழி விநாயகர் கோவில் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து ஊஞ்சலில் காட்சியளித்த ஸ்ரீ பொய்யாமொழி விநாயகருக்கு மகாதிபாரதனை, கும்ப தீபம், நட்சத்திர தீபம், மற்றும் சத்திரங்கள் கொண்டு சோடச உபச்சாரம், கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர் மணிகண்டன் செய்திருந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

No comments

Copying is disabled on this page!