புதுவை மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் விடுத்துள்ள பரபரப்பு அறிக்கை.
தினசரி வாழ்வாதாரத்தோடு போராடும் தெருவோர வியாபாரிகளை அவர்களது கடையை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அடாவடியாக காலி செய்து வரும் அரசும் அதிகாரிகளும், போலி பட்டா மூலம் கோயில் நிலம் மற்றும் அரசு நிலத்தை அபகரித்தோர் மீது ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா-? புதுச்சேரியில் விதிகள் பலவகையில் மீறப்பட்டு வருகிறது. சட்டவிரோதமாக தொழில் செய்ய பல பேர் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து சேவை என்ற பெயரில் கொள்ளை அடித்து வருகிறார்கள். அனைத்து சமூக விரோத செயல்களும் தைரியமாக அரசியல் கட்சியினுடைய பின்பலத்துடன் பயமின்றி செய்து வருபவர்களை ஆளுநர் அவர்களது நடவடிக்கையை கண்காணித்து கைது செய்ய வேண்டும்.
கடந்த காலங்களில் நிலுவையில் உள்ள பல போலி பட்டா வழக்குகளை உடனடியாக விசாரிக்க வேண்டும். காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் பல ஆலயங்களின் சொத்தை பல்வேறு ஆண்டுகளாக குறைந்த வாடகைக்கு செயல்பட்டு வருவதை ரத்து செய்ய வேண்டும். சட்ட விரோதமாக தொடர்ந்து நீர்நிலைகள் மற்றும் நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து வருபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கைது செய்ய வேண்டும். புதுச்சேரியில் கடற்கரை ஒட்டிய பகுதியில் பல ஏக்கர் நிலங்களை அரசு குத்தகை விடப்பட்டுள்ளது.
அவற்றை குறைந்த விலையில் பினாமி பெயரில் குத்தகை எடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குத்தகையை மீறி பல கட்டடங்கள் கட்டப்பட்டு அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்படுத்தி வருபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை தேவை. ஓராண்டுக்கு மேல் குத்தகைக்கு அரசு கொடுக்கக் கூடாது. மேலும் பொது ஏலம் முறையில் ஒவ்வொரு முறையும் ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல அதிகாரிகளின் துணையுடன் அரசுக்கு வர வேண்டிய வருவாய் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதை சரி செய்யாமல் பொதுமக்களுடைய ஒட்டுமொத்த வரிப்பணமும் விரயம் செய்யப்பட்டு வருகிறது. ஆளுநர் அவர்கள் அரசின் வருவாயைப் பெருக்க, சுரண்டப்பட்டு வருகின்ற அரசுக்கு இழப்பு ஏற்படுகின்ற அனைத்து துறைவாரியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் மீனவர்கள் கடலில் போதுமான வருமானம் இன்றி மிகவும் வாடுகின்ற சூழலையில் இருந்து வருகிறார்கள்.
அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து கடல் பகுதிகளில் வருவாய் வரும் அளவில் மீனவர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும. இதுவரை போலியாக மாற்றப்பட்ட கோயில் நிலங்களை ரத்து செய்து, சம்பந்தப்பட்ட கோயிலுக்கே மீண்டும் வழங்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments