Breaking News

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 750 குவிண்டால் பருத்தி முறைமுக ஏலத்தில் கொள்முதல் செய்யப்பட்டது, நாகை விற்பனைக்குழு செயலாளர் வித்யா நேரில் ஆய்வு.


மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாகை விற்பனைக்குழு மூலம் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின்கீழ் இ-நாம் முறையில் 2024-ஆம் ஆண்டுக்கான பருத்தி கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இன்று நடைபெற்ற மறைமுக ஏலத்தில் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.8,209-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.6,669-க்கும் சராசரியாக ரூ.7,730-க்கும் விலைபோனது. மொத்தமாக 750 குவிண்டால் கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்றது. பருத்தி மறைமுக ஏலத்தை நாகை விற்பனைக்குழு செயலாளர் கோ.வித்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார். 

இந்த ஏலத்தில் 1,250 விவசாயிகள் கொண்டுவந்த பருத்தியை, தேனி, கோவை, கொங்கணாபுரம், பெரம்பலூர், விழுப்புரம், திருப்பூர், கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டங்களில்  இருந்து வந்திருந்த 12 வியாபாரிகள் மற்றும் மில் அதிபர்கள் கொள்முதல் செய்தனர்.

No comments

Copying is disabled on this page!