உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் அருள்மிகு செல்லியம்மன் கோவில் மகமேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் கிராமத்தில் அருள்மிகு செல்லியம்மன் கோவில் உள்ளது மிகவும் பழமையான இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் மகமேர் திருவிழா நடைபெற்று வருவது வழக்கம் 15 நாட்கள் நடக்கும் இந்த திருவிழா கடந்த வாரம் தொடங்கியது தொடர்ந்து தினசரி சுவாமி வீதி உலா நடைபெற்று வந்த நிலையில் அப்பொழுது ஏராளமான பக்தர்கள் தங்கள் வீடுகள் முன்பாக நின்று செல்லியம்மனை வழிபட்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகமேர் திருவிழா செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 12.30 மணிக்கு தொடங்கியது அப்பொழுது சுமார் 70 அடி உயரத்தில் மரம் மற்றும் மூங்கில்களை கொண்டு தயார் செய்யப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மகமேர் தேரில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட செல்லியம்மனை கோவிலில் இருந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சக்தி கோஷம் முழங்க கோவிலை வலம் வந்து மகமேர் தேரில் வைத்தனர்.
இதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பக்தர்கள் 70 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த மகமேர் தேரில் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட செல்லியம்மன் வைக்கப்பட்ட பின்பு 70 அடி உயர மகமேர் திருத்தேரை செல்லியம்மன் கோவில் தெரு, உளுந்தூர்பேட்டை சாலை, தெற்கு தெரு, மேற்கு தெரு, வடக்குத்தெரு, வழியே சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் மகமேர் தேரை தோளில் சுமந்து வந்து கோவிலை அடைந்தனர்.
வழக்கமாக மகமேர் தேர் புறப்பட்டு 30 நிமிடத்திற்குள்ளாக கோவிலை வந்தடைய வேண்டிய நிலையில் இந்த ஆண்டு பல இடங்களில் மகமேர் தேரை தூக்கிச் சென்ற இளைஞர்கள் ஆங்கே ஆங்கே வைத்து தூக்கினர் அப்பொழுது பல இடங்களில் தேர் சாய்ந்து குலுங்கியது இதைப் பார்த்த பக்தர்கள் பலரும் கண்ணீர் விட்டு அழுததோடு தேர் எந்த விதமான சிரமமும் இன்றி நல்ல முறையில் கோவிலை வந்து அடைய வேண்டும் என்று தீவிரமாக பிரார்த்தனை செய்தனர்.
இதைத் தொடர்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கு பின்பு தேர் கோவிலை அடைந்தது தொடர்ந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மகமேர் தேரை இளைஞர்கள் தூக்கி வந்த பொழுது அனைத்து வீடுகளிலும் இருந்த பெண்கள் தங்கள் வீடுகளின் முன்பாக கற்பூர ஏற்றி செல்லியம்மனை வழிபட்டனர்.
No comments