கலிதீர்த்தாள்குப்பம் கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி மாநிலம், மதகடிப்பட்டு அருகில் உள்ள கலிதீர்த்தாள் குப்பம் கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2024-25 கல்வி ஆண்டுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது. இந்த அறிவியல் கண்காட்சியை திருபுவனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் கலந்து கொண்டு விழாவிற்கு தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து மாணவர்களின் அனைத்து படைப்புகளையும் பார்வையிட்டு வெகுவாக பாராட்டினார்.
பள்ளியின் துணை முதல்வர் பாக்கியலட்சுமி, பள்ளியின் தலைமை ஆசிரியர் அறிவழகி ஆகியோர் உடன் இருந்தனர். இப்பள்ளி மாணவர்கள் அறிவியல் சம்பந்தமான காட்சிப்படைப்பு மாதிரிகள் நூற்றுக்கு மேலாக செய்திருந்தனர். இக்கண்காட்சியினை இப்பள்ளி அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பள்ளி மாணவர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments