மின்னணு வாக்கு எந்திரம் மூலம் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மாணவர் தலைவர் தேர்தல்.
கோயம்புத்தூர், மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று பள்ளி மாணவர் தலைவர் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலமாக நடத்தப்பட்டது.
550 மாணவர்கள் மற்றும் மூன்று ஆசிரியர்கள் இதில் இன்று வாக்களித்தனர் 9 மாணவர்கள் வேட்பாளராக போட்டியிட்டனர். மசக்காளிபாளையம் பள்ளியில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர் தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் இந்த ஆண்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கோயம்புத்தூர் ராக் அமைப்பின் நிதி உதவியுடன் வடிவமைக்கப்பட்டது. கடந்த வாரத்திலேயே மாணவர்களுக்கு இதில் வாக்களிக்கும் முறை விளக்கப்பட்டது.
மாணவர்களுக்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கும் வழிமுறைகளை அறிவதோடு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் எவ்வாறு செயல்படுகிறது, எவ்வாறு வாக்களிப்பது போன்ற வழிமுறைகளை அறிகின்றனர்.
எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரையிலான 500 க்கும் மேலான மாணவர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர்களாக மாணவர்களே செயல்பட்டனர். வேட்புமனுத் தாக்கல், பிரச்சாரம் என அனைத்துமே பொதுத்தேர்தலில் இருப்பது போல கடைப்பிடிக்கப்பட்டன.
No comments