Breaking News

போச்சம்பள்ளியில் போலி சிகரெட் விற்பனை - காவல் நிலையம் எதிரிலேயே பெட்டிக்கடை.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் சிறிய பெட்டிக்கடைகளில் கூட போலி சிகரெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, போச்சம்பள்ளி காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள ஒரு பெட்டிக்கடையில், கோல்ட் பிளாக், கிங்ஸ், சிஷர்ஸ் போன்ற பிரபல சிகரெட்டுகளின் போலி வடிவங்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

போலீசார் அவ்வப்போது போதைப் பொருள் மற்றும் புகையிலை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், போலி சிகரெட்டுகளின் விற்பனை தொடர்ந்து நடைபெறுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. போலி புகையிலை பயன்படுத்துவதால் விரைவில் உடல் நலக் கேடுகள் ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுபோன்ற போலி சிகரெட்டுகளை சிறிய கடைகளுக்கு விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

No comments

Copying is disabled on this page!